Friday, May 18, 2007

இளைஞர்களை வரவேற்க மறுக்கும் இயற்கை விவசாயிகள்

சென்னைக்கு அருகில் வசிக்கும் ஒரு இயற்கை விவசாயியை சமீபத்தில் பார்த்தேன். எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று அவரிடம் சொன்னேன். பாரம்பரியமாக இருக்கும் எங்களாலேயே விவசாயம் செய்ய முடியவில்லை. நீங்கள் வந்தால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். அவர் சொன்னது நியாயம்தான். அனுபவசாலிகளே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது புதியவர்களால் எந்த அற்புதத்தையும் செய்துவிட முடியாது என்பது உண்மைதான்.

ஆனால், பாரம்பரிய விவசாயிகள் இப்படிச் சொல்லிச் சொல்லியே புதியவர்களை விவசாயத்தின் பக்கம் வரவிடுவதில்லை. எல்லாத் தொழிலிலும் கஷ்டம் உண்டு. விவசாயத்தில் பல மடங்கு கஷ்டங்கள் உண்டு. இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக புதியவர்கள் வரும் போது இருகரம் கூப்பி அழைக்க வேண்டாமா? நமக்கான தொழில்நுட்பங்களைக் கற்றுத் தர வேண்டாமா? என்று எனக்கு ஒரே யோசனையாக இருந்தது.

மண் வளம் காக்க நம் முன்னோர்கள் எத்தனையோ வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மீன்குண்பம் என்கிற முறையைப் பற்றி கேள்விப்பட்ட போது ஆச்சரியப்பட்டுப் போனேன்.

மீன் குழம்பு என்றால் நம்மில் பலர் சப்புக் கொட்ட ஆரம்பித்துவிடுவோம். ஆனால், பயிர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை மீன்கள்.

மண்ணில் தழைச்சத்தைப் பெருக்க, அதாவது நைட்ரஜன் சத்தைப் பெருக்க - கண்ட கண்ட உரங்களைக் கொட்டுவதற்குப் பதிலாக பசுந்தாள் உரங்களை நிறைய பயன்படுத்தலாம் என்கிறார்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள். உழவு முடிந்து பயிர்கள் வளர ஆரம்பித்தபிறகு தழைச்சத்து கூட்ட வேண்டுமெனில் மீன் குண்பத்தை தாராளாமாகப் பயிர்களுக்குக் கொடுக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

இந்த மீன் குண்பத்தைத் தயார் செய்வது மிகவும் சுலபமாம். குளத்து மீன், ஏரி மீன், கிணற்று மீன் இதில் ஏதாவது ஒரு வகை மீனை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனோடு தூளாக்கிய நாட்டு வெல்லத்தை கலந்து, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துவிடுங்கள். இப்படி 20 முதல் 22 நாட்கள் மூடி வைக்க வேண்டுமாம்.

பிறகு திறந்து பார்த்தால் கெட்டியான சாறு வடிகட்டி நிற்கும். இதில் ஒரு மில்லி சாறை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பயிருக்குப் பாய்ச்சினால் நல்ல பலன் கிடைக்கிறதாம்.

இயற்கை உரங்களை நம் முன்னோர்கள் எதிலிருந்தெல்லாம் உருவாக்கி இருக்கிறார்கள் பார்த்தீர்களா!

3 comments:

அமிழ்து - Sathis M R said...

வருத்தமான விஷயம் தான்! எனக்கும் விவாசயத்திலும், கிராமப் பொருளாதார முன்னேற்றத்திலும் தணியாத ஆர்வமுண்டு. தெரிந்தவர்கள் ஊக்குவித்தால் இளைஞர்களும் களத்தில் இறங்கலாம்!

எஸ். கதிரவன் said...

தெரிந்தவர்கள் ஊக்குவித்தால் நானும் களத்தில் இறங்கலாம்!

Santhosh said...

I too interested in Agriculture. But need the guidance.